24 செப்., 2015

குர்ஆன் நினைவூட்டல்கள்- அறிமுகம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற 

அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சாந்தியும், சமாதானமும் இறைவன் புறத்திலிருந்து தங்களை வந்தடையட்டும்.... :)

அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) என்பது குர்ஆனின் பெயர்களில் ஒன்றாகும். ஞானம் நிறைந்த இவ்வேத வழிகாட்டல்களை வாழ்வின் அனைத்து அடியிலும் நம் மனதில் நினைவூட்டிக் கொண்டால் இவ்வுலகிலும், மறுவுலகிலும் வெற்றி பெறலாம்... இறை நாடினால்...

அதனை எளிதாக்கும் பொருட்டு இந்த வலைப்பூவில் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு தலைப்பாக தேர்ந்தெடுத்து அது தொடர்பான குர்ஆன் வசனங்களை தொகுக்க எண்ணியுள்ளேன்... இறை நாடினால்...