24 செப்., 2015

குர்ஆன் நினைவூட்டல்கள்- அறிமுகம்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற 

அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சாந்தியும், சமாதானமும் இறைவன் புறத்திலிருந்து தங்களை வந்தடையட்டும்.... :)

அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) என்பது குர்ஆனின் பெயர்களில் ஒன்றாகும். ஞானம் நிறைந்த இவ்வேத வழிகாட்டல்களை வாழ்வின் அனைத்து அடியிலும் நம் மனதில் நினைவூட்டிக் கொண்டால் இவ்வுலகிலும், மறுவுலகிலும் வெற்றி பெறலாம்... இறை நாடினால்...

அதனை எளிதாக்கும் பொருட்டு இந்த வலைப்பூவில் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு தலைப்பாக தேர்ந்தெடுத்து அது தொடர்பான குர்ஆன் வசனங்களை தொகுக்க எண்ணியுள்ளேன்... இறை நாடினால்...




உதாரணமாக "உலக வாழ்வில் மூழ்குதல்" என்று தலைப்பிட்டு அப்பதிவில் உலக வாழ்வில் மூழ்குவதின் விளைவுகள், தண்டனைகள் மற்றும் அது குறித்த எச்சரிக்கைகள் அடங்கிய  குர்ஆன் வசனங்களை  தொகுப்பது.

இதன் மூலம் குறித்த ஒரு விடயம் பற்றிய  குர்ஆனின் வழிகாட்டலுடன் கூடிய நினைவூட்டல்களை அனைவரும் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

இறை நாடினால்...




உங்கள் பங்களிப்பு :

அந்தந்த தலைப்பின் கீழ் என் தேடலுக்கெட்டிய வசனங்களை நான் தொகுக்க, குறிப்பிட்ட தலைப்பில் விடுபட்ட வசனங்கள் ஏதேனும் உங்களுக்கு தெரிந்திருப்பின் அதை அப்பதிவின் கீழ் கமெண்டில் தெரிவித்தால் நான் அதை பதிவில் இணைந்து விடுவேன்... இறை நாடினால்...

மேலும், இப்பணியை இன்னும் சிறப்பாக செய்வதற்கான உங்கள் ஆலோசனைகளையும் அவசியம் தாருங்கள்.

அல்லாஹ்வின் அருளால் எனது இம்முயற்சி இம்மையிலும், மறுமையிலும் எனக்கு அதிக நன்மைகளை பெற்றுத் தர பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 


அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலகிலும் வெற்றியை வழங்குவானாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக